முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை 38-வது லீக் ஆட்டம்: இந்திய அணியின் வெற்றி தொடருமா ? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பிர்மிங்காம் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றி தொடருமா ? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ன்று இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இறுதி கட்டத்தை...

உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள்அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. நான்காவதாக உள்ளே செல்வதற்கு இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கட்டாயம் வெற்றி...

உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கடைசியாக இலங்கை, ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இன்று இந்தியாவிற்கு எதிரான போட்யில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றி தனது வெற்றியை தொடரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில வெற்றிப்பெற்றால் 2-வது அணியாக அரையிறுதியில் இந்தியா நுழையும்.

சில மாற்றங்கள்...

இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியடையாத அணியாக வலம் வருகிறது. அதை தக்கவைத்து கொள்ள இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதற்காக இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக விலகிய ஷிகார் தவானுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள விஜய் சங்கர் கடந்த 3 போட்டிகளிலும் எந்த வித சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் தேவைப்படுவதால் ரிஷப் பந்த் அணியில் இடம்பெறலாம்.

ரவீந்திர ஜடேஜா...

அதேப் போல் ஆல்-ரவுண்டரான கேதர் ஜாதவும் இதுவரை எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் அடித்தார். அதுவும் மிகவும் பொறுமையாக விளையாடியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. பந்துவீச்சிலும் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா எடுக்க வாய்ப்பு உள்ளது.

பாதிப்பு இல்லை...

இங்கிலாந்து அணியுடனான போட்டி நடைபெற உள்ள பிர்மிங்காம் மைதானம் சுழற்பந்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவிந்திர ஜடேஜா அணியில் இடம்பெற அதிகப்படியான வாய்ப்புள்ளது. கேதர் ஜாதவின் மாற்றத்தால் இந்திய அணியில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த மாற்றங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கைகொடுக்கும் என்பதால் கேப்டன் கோலி அணியின் மாற்றத்தை ஏற்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து