முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரையிறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் நுழைந்தன.

8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நடந்த 2-வது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்க அணி, போட்டியை நடத்தும் பிரான்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பான இந்த மோதலில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்க அணியில் மெகன் ராபினோ 5-வது மற்றும் 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து