தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவாக உள்ளதால் அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி தாக்கு:

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      மதுரை
30 tmm rpu

திருமங்கலம்.- தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவாக உள்ளதால் அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு என்று திருமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அதிரடியாக பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்  ஒன்றியத்திலுள்ள மறவன்குளம்,உச்சப்பட்டி,கப்பலூர்,மேலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டங்களுக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆலொசனை கூட்டங்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்தும்,எதிர்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அ.தி.மு.க.விற்கு 100சதவீத வெற்றியை பெற்றுத் தந்திடுவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மறவன்குளம் கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது: மேடைகளில் பொய்யை மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் சொல்லிடும் பொய் உண்மையாக ஆவதற்கு காலம் எந்தவிதத்திலும் கைகொடுக்காது.தேர்லுக்கு முன்பு அப்படி நடந்துவிடும் இப்படி நடந்துவிடும் என்று.அவர் சொன்னபடி அப்படியும் நடக்கவில்லை இப்படியும் நடக்கவில்லை.அம்மாவுடைய அரசு தான் இன்றும் தொடர்கிறது. தேர்தலுக்கு பின்பு ஐந்து நாட்கள் அமைதியாக இருந்தார்கள்.தற்போது மீண்டும் பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு என்பது ஐந்து ஆண்டுகாலம்.அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் அம்மாவுடைய அரசு மக்களுக்கு முழுமையான சேவை செய்திடும்.ஆனால் அதற்கு முனபாகவே பல்வேறு இடைத்தரகர்களை நியமித்து ஆள்பிடிக்கிற வேலைகளை செய்து கொண்டு மேடையிலே பரிசுத்தமானவர் போல் ஸ்டாலின் பேசுகிறார்.அம்மாவுடைய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முதல்வர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடியார் மீதான நம்பிக்கை மக்களிடம் பெருகிக் கொண்டே இருக்கிறது.இந்த அச்சத்தினால் தான் அம்மாவுடைய அரசின் ஆயளை பற்றி அடிக்கடி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.அம்மாவுடைய உண்மை விசுவாசிகள் யாரும் புரட்சித்தலைவர் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.விற்கு போக மாட்டார்கள்.எனவே அம்மா அரசின் ஆயுள் குறித்த ஸ்டாலினின் பேச்சு வெத்து வேட்டு.இந்த பேச்சிற்கு பதிலாக தனது செயலால் முதல்வர் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை பொருத்தமட்டில் பவமழை பொய்த்ததால் வந்த விளைவு.இதனால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதுடன் பல்வேறு கட்ட வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டங்களை அம்மாவின் அரசுசெயல்படுத்தி வருகிறது.
அத்துடன் முந்தைய தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரத்தவறிய நல்லபல திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.அம்மா இருந்தபோது இந்த 41சதவீத வாக்கு தற்போது 38.2சதவீதமாக உள்ளது.இதற்கு காரணம் துரோகி டிடிவியின் பொய் பிரச்சாரம் மற்றும் எதிர்கட்சியினரின் கோயபல்ஸ் பிரச்சாரம் அத்துடன் புதுகட்சிகளின் வரவு தான்.இந்த மும்முனை தாக்குதலை சமாளித்து இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை அம்மா அரசு பெற்றுள்ளது.தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து எதிர்கட்சியினர் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.இதனை முறியடித்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விவசாய கிணறுகள்,கூட்டுகுடிநீர் திட்டங்கள்,கடல்நீரை குடிநீராக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாகத்தான் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் முழமையடைந்தவுடன் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் பெருமளவு தீர்ந்திடும்.பல்வேறு தடைகளை தாண்டி மக்களின் பேராதரவுடன் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.20,22 என்று ஸ்டாலின் கணக்கு போட்டு வருகிறார்.அவரது கணக்கு தப்பு கணக்கு ஒருகாலும் அது கைகூடாது.தமிழக அரசு மேற்கொண்டு வரும் மாற்று நடவடிக்கைகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தி.மு.க ஆட்சியின் போது இருந்த சட்டம்-ஒழுங்கு பாதிப்பு,நில அபகரிப்பு,மின்தட்டுப்பாடு போன்றவை அம்மா ஆட்சியில் கிடையாது.இதனால் தான் மக்கள் அம்மா அரசுக்கு பாதுகாவலாக உள்ளனர்.எனவே தான் புரட்சித்தலைவி அம்மா அறிவித்தபடி மக்கள் ஆதரவுடன் அம்மாவுடைய அரசு இன்னும் நூறு ஆண்டுகள் அன்னைத் தமிழகத்தை ஆள்வது நிச்சயம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டங்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், போத்திராஜா, திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ரமாசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,திருமங்கலம் ஒன்றிய அவை தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிச்சாமி,ஆறுமுகம்,சிவஜோதி தர்மர்,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சதீஷ்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், சாமிநாதன்,நாகையாசாமி,எஸ்.பி.எஸ்.ராஜா,ஜெய.சி.செல்வகுமார்,சின்னன்,சாமிநாதன்,அழகர்,கல்லுப்பட்டி துணைச் செயலாளர் மீனாலட்சுமி,சின்னன்,பரமசிவம்,லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்;டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து