முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபை தேர்தல் வேட்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற மேல்சபைக்கு ம.தி.மு.க. சார்பில் போட்டியிட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. தி.மு.க.வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் தாயகத்தில் நேற்று ம.தி.மு.க. உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மேல்சபைக்கான(ராஜ்யசபை) வேட்பாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து