முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் அணி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு - மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என பேட்டி

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தினகரன் அணியில் இருந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். தினகரன் அணியில் உள்ள இரு எம்.எல்.ஏ.க்கள் விரைவில் முதல்வரை சந்திப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஆரம்பகால தொண்டன்...

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறந்தாங்கி சட்டமன்ற

உறுப்பினர் ரத்தினசபாபதி மரியாதைநிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இடையில் வேறு அணிக்குச் சென்றது அனைவருக்கும் தெரியும். தினகரன் தனிக் கட்சிஆரம்பித்தவுடன் நான் அங்கிருந்து விலகி விட்டேன். திரும்பவும் (அ.தி.மு.க.வில்) இந்த இயக்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பத்தோடு இருந்தேன். தடுமாறி போயிருந்த என்னை மீண்டும் தாய்க் கழகத்திற்கு கொண்டு வந்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். அவருடன் முதல்வரைச் சந்தித்துத் தொடர்ந்து கட்சியில் தொடர்ந்து செயல்படுவதாகத் தெரிவித்தேன்.  அவர் (டி.டி.வி. தினகரன் )கட்சி ஆரமித்தவுடன் நாங்கள் விலகி விட்டோம். அவர்களை விமர்சனம் செய்வது தேவையில்லாத ஒன்று. மக்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டார்கள். இந்த இயக்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். இதற்குக் காரணம் இந்த இயக்கத்தின் ஆரம்பகால தொண்டன் நான்.

மக்கள் அங்கீகாரம்...

இந்த இயக்கம் என்னை வளர்த்தது. இந்த இயக்கத்தை நான் வளர்த்தேன். அதனால் இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மீண்டும் வெற்றியைப் பெற வேண்டும். ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, அந்த அணியில் இருப்பவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து வலிமையோடு இந்த இயக்கத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் கூடிய சீக்கிரம் வருவார்கள். இணைவார்கள். அவர்களை (டி.டி.வி. தினகரன்) மக்கள் கடைசி இடத்திற்குத் தள்ளி விட்டார்கள். இதுதான் உண்மையான அ.தி.மு.க. இங்குதான் சின்னம் இருக்கிறது. இங்குதான் கட்சி இருக்கிறது என்று மக்கள் அங்கீகாரம் தந்துள்ளார்கள்.

என்னுடைய எண்ணம்...

இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான அ.தி.மு.க. உண்மையான அ.தி.மு.க.இதுதான் என்று மக்கள் முடிவு செய்துள்ளார்கள். பேரவைத் தலைவரிடம் எங்களின் விளக்கத்தை அளிப்போம். எப்போதும் போல கட்சியில் தொடர்ந்து செயல்படுவோம். அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து