முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய கோரிக்கை மீதான விவாதங்கள்: அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, காமராஜ் இன்று சபையில் பதில்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, காமராஜ் ஆகியோர்  பதிலளித்து பேசுகிறார்கள்.

தமிழக சட்டசபையின் மானிய கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்  தங்கள் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு விவாதங்களுக்கு பதிலளித்து வருகிறார்கள். நேற்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி. அன்பழகன் ஆகியோர் விவாதங்களுக்கு பதிலளித்து பலமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவு நுகர்வோர்பாதுகாப்புத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த விவாதங்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பதிலளித்து தங்கள் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். முன்னதாக இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றபின் சபைக்கு சென்று பதிலுரையாற்றுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து