முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மா சதம் விளாசல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

பர்மிங்காம் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தார்.

பேட்டிங் தேர்வு...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா  மற்றும்   வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இணைந்து திறம்பட ஆடி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.

4-வது சதம்...

ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா கொடுத்த கேட்சினை வங்காளதேச அணி நழுவவிட்டது. இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி, தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளையும், சிக்ஸ்ரைகளையும் பறக்கவிட்ட ரோகித் சர்மா இந்த தொடரில் 4-வது சதத்தினை பதிவு செய்து அசத்தினார். ரோகித் சர்மா 104 ரன்களில் அவுட் ஆனார்.

நடப்பு தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள்:

1) ரோகித் சர்மா - 520 ரன்கள்.
2) டேவிட் வார்னர் - 516 ரன்கள்.
3) ஆரோன் ஃபின்ச் - 504 ரன்கள்.
4) ஷகிப் அல் ஹசன் - 476 ரன்கள்.
5) ஜோ ரூட் -476 ரன்கள்.

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:

1) 2003 - சச்சின் - 673 ரன்கள்.
2) 1996 - சச்சின் - 523 ரன்கள்.
3) 2019 - ரோகித் சர்மா - 520* ரன்கள்.
4) 2011 - சச்சின் - 482 ரன்கள்.

ரோகித் சர்மா இன்னிங்ஸ்:

1) 2015 - 17 போட்டிகள் - 815 ரன்கள் - சராசரி 50.9.
2) 2016 - 10 போட்டிகள் - 564 ரன்கள் - சராசரி 62.7.
3) 2017 - 21 போட்டிகள் - 1293 ரன்கள் - சராசரி 71.8.
4) 2018 - 19 போட்டிகள் - 1030 ரன்கள் - சராசரி 73.6.
5) 2019 - 20 போட்டிகள் - 1076 ரன்கள் - சராசரி 59.8.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து