முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை போட்டியில் ஆடும் லெவனில் ஆட 12 வருடம் காத்திருந்த தினேஷ் கார்த்திக் !

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : 2007 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக், தற்போதுதான் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் ஆட 12 வருடம் காத்திருக்கிறார்.

2004-ல் அறிமுகம்...

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். 34 வயதாகும் இவர் கடந்த 2004-ல் இந்திய அணியில் அறிமுகமானார். ஆனால், டோனி வருகையாலும் மோசமான பார்ம் காரணத்தாலும் அணியில் அவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

விளையாடவில்லை...

இதனால் 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 91 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன்பின் 2011 மற்றும் 2015 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். நேற்று வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். இதனால் 12 வருடங்கள் கழித்து அணியில் அறிமுகமாகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து