முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து கட்சிகள், சட்டநிபுணர்கள் கருத்துக்கேட்டு முடிவு - சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மருத்துவப்படிப்பில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு கூடுதலாக வழங்கப்படும் இடங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டநிபுணர்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம்கொண்டுவந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு சட்டம் 45/1994 உருவாக்கி சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளார்.

இதற்காக ஜெயலலிதா ‘‘சமூக நீதி காத்த வீராங்கனை’’ என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்.  தற்போது அரசு தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையை பாதுகாக்க தொடர்ந்து அனைத்து நடவடிக்கையையும் எடுத்துவருகிறது.மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 350 மருத்துவக் கல்வி இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் தமிழகம், கர்நாடகா மாநிலம் தவிர மீதமுள்ள மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. அக்கடிதத்தில் மருத்துவக் கல்வியினைபொறுத்தவரை 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் பட்சத்தில் 25 விழுக்காடு கூடுதல் மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் இதற்காக எந்தவொரு கூடுதல் வசதிகளும் கல்லூரியில் ஏற்படுத்த அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தும் பட்சத்தில் கூடுதலாக 25 விழுக்காடு புதிய மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதாவது 1000 1250 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீட்டை தவிர மீதமுள்ள இடங்கள் தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையிலேயே நிரப்பப்படும்.

இதன் காரணமாக ஏற்கனவே பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் பயனடைந்து வருபவர்களும் இந்த ஒதுக்கீடு முறையில் கூடுதலாக பயனடைய ஏதுவாகும். இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது. இவ்வாறு பேசினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்  பொன்முடி பேசுகையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால் மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது என்றால் அது மாநிலஅரசு உரிமையை பறிக்கும் நடவடிக்கை என்றும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும். எந்த நிபந்தனைகளை இல்லாமல் கூடுதல் இடங்களை பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாங்கள் எந்த நிபந்தனைகளையும் ஏற்கவில்லை. ஏற்கனவே கூடுதல் இடங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வந்திருக்கின்றன. அதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. கூடுதல் இடங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். மேலும் இந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. அதுகுறித்து தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்இயக்கங்களும் அதை வரவேற்றன. அதை பற்றி காங்கிரசார் என்னசொல்கிறார்கள் என்று தெரிவிக்கவேண்டும் என்று கேள்விஎழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து