முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் 3 பேர் கைதான சம்பவம்: செல்லப் பிராணிக்கு ஆதரவு கரம் நீட்டும் ம.பி. போலீசார்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

போபால் : மத்திய பிரதேசத்தில் வழக்கு ஒன்றில் குடும்பத்தையே கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிக்கு மட்டும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் நிலப்பிரச்சனை காரணமாக தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். உயிரிழந்த 5 பேரில் 10 வயது சிறுவனும் ஒருவன். இந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் மனோகர் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் மூவரை தவிர அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாயும் இருந்துள்ளது. வீட்டை பூட்டி விட்டு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். முதலில் போலீசார் வளர்த்தவர்களை அழைத்துச் செல்வதை பார்த்து நாய் குரைக்க ஆரம்பித்து விட்டது. பின்னர் போலீசார் அந்த நாயை கட்டுப்படுத்தினர். மனோகர் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களிடம் இந்த நாயை பார்த்துக் கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு அனைவரும் மறுத்துள்ளனர். எனவே, இந்த பிராணியை பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் போனால் பசியில் இறந்து விடும் என்பதால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணி நேரம் போக மற்ற நேரத்தில் நாயை குளிப்பாட்டுவது, உணவு வழங்குவது என அன்பாக நடந்துக் கொள்வதாக கூறுகின்றனர். மேலும் அந்த நாய் இப்போது போலீசாரிடம் அன்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து