முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சிக்கு நான் தலைவர் இல்லை - ராகுல் திட்டவட்ட அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். ஆதலால் நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டியை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என்ற ராகுலின் அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. ராகுல் இப்படி முடிவெடுத்திருந்தால், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தின் வாசலில் அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர், ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடாது என்பதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி காப்பாற்றினர்.

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தனது ராஜினாமா குறித்து கூறுகையில், நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டியை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார். இந்த செய்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து