முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பையில் தொடரும் அதிரடி: ரோகித் சர்மாவுக்கு புகழாரம் சூட்டிய கேப்டன் விராட்கோலி

புதன்கிழமை, 3 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ரோகித் சர்மாதான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருது

இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 314 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 104 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவின் நான்காவது சதம் இதுவாகும். சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவை இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார்.

தலைசிறந்த வீரர்...

ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக நான் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர்தான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர். அவர் சிறப்பாக விளையாடும்போதெல்லாம், இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கிச் செல்லும். அவர் விளையாடுவதை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்த உலகக்கோப்பையை அவரது வாழ்க்கையாக எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை பார்க்க ஜாலியாக உள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து