பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆணையாளர் . விசாகன், ஆய்வு

புதன்கிழமை, 3 ஜூலை 2019      மதுரை
3 mdu periyar bus stand

  மதுரை,- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் ச.விசாகன்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.75 மாடக்குளம் கோபாலிபுரம் மற்றும் குறுக்குத் தெருக்களில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக  அமைக்கப் பட்டுள்ள தார் சாலைகளையும், இந்திரா நகரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறினையும், வார்டு எண்.89 ஜெய்ஹிந்துபுரம் என்.எஸ்.கே.தெரு, நேதாஜி 2வது தெரு ஆகிய பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகளையும், வார்டு எண்.90 நேதாஜி 8 வது தெருவில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு அங்கன்வாடி மையத்தினையும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், வார்டு எண்.94 முல்லை நகர் மற்றும் ஜே.பி.தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதார் சாலைகளையும், வார்டு எண்.97 ஹார்விப்பட்டி சமுதாய கூடத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மராமத்து பணிகளையும், வார்டு எண்.98 திருநகர் விளாச்சேரி சாலை மற்றும் 1 முதல் 4 வரையுள்ள குறுக்குத் தெருக்களில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலைகளையும், வார்டு எண்.99 தேவி நகர் வெங்கடேஸ்வரா தெருவில் பராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், வார்டு எண்.100 பைக்காரா முத்துராம லிங்கபுரம் ரோஜா தெருவில் ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்டல் சாலையினையும், அரசினர் காலனியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளை கிணறினையும், மேலவாசல் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், வார்டு எண்.84 நேதாஜிரோடு மேல பாண்டியன் அகிழ் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், வார்டு எண்.81 வக்கீல் புதுத்தெரு, வி.க.சாலையில்     ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகாலினையும், அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியில்     ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணியினையும் என மொத்தம் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுற்றுலா பயணிகள் மையம் கட்டுமான பணியினையும் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன், உதவிப்பொறியாளர்கள் தியாகராஜன், மயிலேறிநாதன், முருகன், முனீர்அகமது, சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், ஜான்பீட்டர்  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து