முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைகொடுத்த அதிர்ஷ்டம்: உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் 'ரோகித் சர்மா' ரன்குவிப்பில் முதலிடம்

புதன்கிழமை, 3 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இந்திய வீரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

அதிர்ஷ்டமும்...

உலகக்கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் செய்து நான்கில் சதம் அடித்துள்ளார். மழையால் ஒரு ஆட்டத்தில் விளையாடவில்லை. ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா,  இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். ரோகித் சர்மாவுக்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைக்கொடுத்தது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நான்கு அணிகள் ஐந்து முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்ச்-ஐ பிடிக்க தவறவிட்டன. இதில் தென்ஆப்பிரிக்கா இரண்டு முறை ரோகித் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க தவறியது.

544 ரன்கள்...

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். கேட்ச் மிஸ்சிங் செய்த பிறகு ரோகித் சர்மா 369 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரோகித் சர்மா 544 ரன்கள் குவித்துள்ளார். நான்கு அணிகளும் சரியாக கேட்ச் பிடித்திருந்தால் ரோகித் சர்மா 175 ரன்களே சேர்த்திருப்பார். அதிர்ஷ்டம் அவருக்கு அதிக அளவில் கைக்கொடுத்துள்ளது.

369 ரன்கள்...

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக டேஸ்ட் வார்னர் இரண்டு முறை கேட்சில் இருந்து தப்பித்து 156 ரன்கள் சேர்த்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 4 கேட்சில் இருந்து தப்பித்து 142 ரன்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 5 கேட்சில் இருந்து தப்பித்து 118 ரன்கள் அடித்துள்ளார். மோர்கன் ஒரு கேட்சில் இருந்து தப்பித்து 116 ரன்கள் சேர்த்துள்ளார். அவுட் வாய்பிலிருந்து தப்பிய ரோகித் சர்மா அடித்த ரன்களின் எண்ணிக்கை மட்டும் 369 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுத்திக்கு இந்தியா 2-வது அணியாக முன்னேறியுள்ளதை அடுத்து இவரது அதிரடி மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து