முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 15-ம் தேதி சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படுகிறது - நேரில் பார்க்க 5,000 பேருக்கு மட்டுமே முன்னுரிமை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டோ : நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் வரும் 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.

இந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தியிராத விண்வெளிப் பயணம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த சவாலை இஸ்ரோ எதிர்கொள்ள தயாராகி வருகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் செப். 6 அல்லது 7-ம் தேதி நிலவில் கால் பதிக்கும்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்வது என்று இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் இணையதளமான www.shar.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அந்த இணையதளத்தில் 4-ம் தேதி (நேற்று) நள்ளிரவுக்கு மேல் முன்பதிவுக்கான பிரத்யேக இணைப்புக் கொடுக்கப்படும்.

விண்கலம் ஏவப்படுவதைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில் 5000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 5000 பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருவோருக்கு இந்த வாய்ப்பு கிட்டும். இந்த அரங்கு, விண்கலம் ஏவப்படும் ஏவுதளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும். இஸ்ரோவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து