இலங்கையில் சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      ராமநாதபுரம்
4 rameswaram fisherman

ராமநாதபுரம்,- இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். 
    ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 26-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், நம்புவேல், மற்றுமொரு செல்வராஜ் ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளை கைப்பற்றி 4பேரையும் கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்துள்ளது. இதுபற்றிஅறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை தேடி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக சிறைபிடிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தரதீர்வு என்பதால் கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி செயல்படுத்த வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளை முறைப்படி திருத்தி அமைப்பதன் மூலம் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து இருக்க முடியும். ஆனால் இத்தகைய நடைமுறை எதுவும் நிகழவே இல்லை.
    எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு மீண்டும் நம் கைவசம் வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள்அதிகளவில் உள்ளன. எனவே, மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடாபாக பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பி நமது உரிமை குறித்து பேசி உள்ளேன். மேலும், முன்னதாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவரராஜை சந்தித்து இதுதொடர்பாக விவாதித்துள்ள நிலையில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கரை நேரில் சந்தித்து மீனவர்களின் நிலை குறித்து விரிவாக பேசி உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரியதோடு, மீனவர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன். இதுதவிர, மீனவர்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க நவீன ஜிபிஎஸ் கருவி வழங்குவது குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான உதவிகளை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் உறுதி அளித்தார். எனவே, மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து