ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 84வது பிறந்தநாள் விழா

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      விருதுநகர்
4 ramco news

ராஜபாளையம், - ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா 84வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜாவின் 84வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அவரது நினைவாலயத்தில் பி.ஏ.சி ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரின் கீர்ததனாஞ்சலியும், அதனை தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. விழாவில் ராம்கோ குரூப் சேர்மன்; பி.ஆர் வெங்கட்ராமராஜா கலந்து கொண்டு நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தெற்குவெங்காநல்லூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீஅபிநவவித்யாதீர்த்தபாரதீவேதபாடசாலையில் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவு ஊழியர்களின்; தொடர் ஜோதியை  ராம்கோ குரூப் சேர்மன்; பி.ஆர் வெங்கட்ராமராஜா, அவரது புதல்வர் அபிநவ் ராமசுப்பிரமணியராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் துவக்கி வைத்தனர். பேரணியானது ராமமந்திரத்தில் இருந்து சாரதாம்பாள் கோவிலுக்கு சென்ற பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தொடர் ஜோதி ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்திற்கு சென்றடைந்தது. மாலையில் திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் ராமகிரு~;ண மூர்த்தியின் கர்நாடக இசை நிகழ்ச்சி மற்றும்  பாரதி யார்? என்ற தலைப்பில் இசை,பாடல்கள் கொண்ட பாரதியார் வாழ்க்கை குறித்த வரலாற்று நாடகம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராம்கோ குரூப் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து