முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசு அரசியல் தொடர்கிறது! தி.மு.க. இளைஞரணி செயலராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அக்கட்சியில் வாரிசு அரசியல் தொடர்வதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞரணி செயலாளராக முன்பு ஸ்டாலின் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மகனுக்கு முடிசூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தி.மு.க.வில் தொடரும் வாரிசு அரசியலை நன்கு அறிந்து கொள்ளலாம். கட்சித் தலைவராக முதலில் கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். நாளை உதயநிதியும் கட்சித் தலைவராக வந்தாலும் ஆச்சரியமில்லை. அதற்கு அச்சாரம்தான் இளைஞரணி செயலாளர் பதவி என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து