முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-க்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள். தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தான் புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் குழாய் மூலமாக குடிநீர் அளிப்பதற்கு 2020-ம் ஆண்டுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2024-ம் ஆண்டிற்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.  ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை பலர் ஏற்று கொண்டுள்ளனர், எல்.இ.டி. விளக்குகள் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி மின் சேமிப்பு. இவ்வாறு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து