முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014-ம் ஆண்டு முதல் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 9.64 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன: அமைச்சர் நிர்மலா

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம்  2-ம் தேதி முதல் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை  9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைநேற்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

உணவுத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணம் இந்திய விவசாயிகள்தான். பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால் அதை மேம்படுத்த நாடு முழுக்க காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில் 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும்.  1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

1.95 கோடி வீடுகள் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும். அக்டோபர் 2014 முதல் 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை. இந்த வெற்றியை நாம் மேலும் கட்டியெழுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நிலையான விற்பனை கழிவு நிர்வாகத்தை மேற்கொள்ள ஸ்வச் பாரத் பணியை விரிவுபடுத்த நான் முன்மொழிகிறேன்.  அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும். ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றமே இலக்கு. எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும். மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு.

மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர், ரெயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த 12 ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அதில் இடம்பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து