திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.100 கோடி வசூலாகி சாதனை

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      ஆன்மிகம்
tirupathi 2018 8 12

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24.10 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். உண்டியல் மூலமாக 91.81 கோடி ரூபாய் வசூலானது. 64.05 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. பக்தரகளுக்கு 95.58 லட்சம் லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. 11.90 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இந்த ஆண்டு ஜூன் மாதம் 26.66 லட்சம் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வசூல் 100.37 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 100 கோடி ரூபாயை தாண்டி ஜூன் மாத உண்டியல் வசூல் சாதனை படைத்துள்ளது. 71.02 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு1.13 கோடி லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 12.88 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து