முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் பா.ஜ.க. நிறுவனருக்கு சபாநாயகர் ஓம் பிரகாஷ் மரியாதை

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பா.ஜ.க. நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு சபாநாயகர் மரியாதை செலுத்தினார்.

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த திருவுருவப்படத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா மரியாதை செலுத்தி வணங்கினார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி, சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில், வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951-ம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின்னர் இக்கட்சி பாரதீய ஜனதா கட்சி என பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து