முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு ஆபத்து? சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க சென்ற 12 எம்.எல்.ஏ.க்கள்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலையும்  சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அமைக்கப்பட்டது. இருந்தும் தேர்தலுக்கு பிறகு ஓராண்டாக கூட்டணிக்குள் சலசலப்பு இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன. கூட்டணி அரசு நடத்துவது விஷத்தை விழுங்கியதற்கு சமம். இதனால் தான் பதவி விலக வேண்டியது இருக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் காங்கிரஸ் தரப்பில் 9, ம.ஜ.த. தரப்பில்3 எம்எல்ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சபாநாயகர் அலுவலகத்தில் இல்லை. இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் எடியூரப்பா, லோக்சபா தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து