முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தல்: வைகோ, தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

 தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். இதில், தி.மு.க. தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர் பதவிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

 இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் மற்றும் திராவிட லட்சியங்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்றும் வைகோ கூறினார். இதே போல் தி.மு.க. வேட்பாளர்களான சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் கனிமொழி, துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து