உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெறும் - உறுதிபட சொல்கிறார் சோயிப் அக்தர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      விளையாட்டு
Shoaib Akhtar 2019 06 15

உலகக்கோப்பை ஆசிய கண்டத்திற்கே கிடைக்க வேண்டும். இந்தியா உறுதியாக இறுதிப் போட்டியில் வெல்லும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. ஒரு அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சோயிப் அக்தர் கூறுகையில், இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு நெருக்கடி கிடையாது. இந்த முறை அவர்கள் மோசமான வகையில் விளையாட மாட்டார்கள் என நம்புகிறேன்.  ஆனால், உலகக் கோப்பை ஆசியக் கண்டத்தில்தான் இருக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில் எனது ஆதரவு இந்தியாவுக்கே என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து