ஒரே உலக கோப்பையில் 5 சதம் - சரித்திர சாதனை படைத்தார் ரோகித்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      விளையாட்டு
rohit historical record 2019 07 07

லீட்ஸ் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தனது 5-வது சதத்தினை பதிவு செய்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் 5-வது சதம் இதுவாகும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 102 ரன்களும், வங்காளதேசத்துக்கு எதிராக 104 ரன்களும் எடுத்து இருந்தார். இதன் மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சரித்திரத்தை ரோகித் சர்மா படைத்தார்.

இதற்கு முன்பு 2015-ம்ஆண்டு உலக கோப்பையில் இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை ரோகித் சர்மா முறியடித்தார்.  44 ஆண்டு கால உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். அந்த சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்தார். ரோகித் சர்மா கடந்த உலக கோப்பை போட்டியில் ஒரு சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் ரோகித் சர்மா 8 ஆட்டத்தில் விளையாடி 647 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (8 ஆட்டத்தில் 606 ரன்கள்) 2-வது இடத்தில் உள்ளார்.  2003-ம் ஆண்டு உலக கோப்பையில் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்ததே ஒரு உலக கோப்பையில் வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். அந்த அரிய சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 27 ரன்களே தேவையாகும். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா -லோகேஷ் ராகுல் ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய இணை எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து