தலாய்லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை - நேபாள அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      உலகம்
Dalai Lama 2019 07 08

காத்மண்டு : நேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட அந்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய்லாமாவான இவர் கடந்த 1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடைய பிறந்த நாள் ஜூலை 6-ம் தேதி ஆகும். கடந்த 1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வசித்து வரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் பகுதியில் உள்ள முஸ்டங்கும்பா என்ற இடத்தில் பல நிகழ்ச்சிகளை கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் பிறந்த நாளை கொண்டாட தடை விதித்த நேபாள அரசு அப்பகுதிக்கு பாதுகாப்பு படையை அனுப்பி வைத்தது. விழாவில் அமெரிக்கா ஜெர்மனி, மற்றும் இங்கிலாந்துநாட்டு தூதுவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

விழாவை ரத்து செய்தது குறித்து கருத்து தெரிவித்த வெளிநாட்டுதூதர் ஒருவர் கூறுகையில்,  இது திபெத்திய சமூக மக்களின் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து