முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்து விட்ட முதல்வர் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது மந்திரி பதவிகளை நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதனால், 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமியால் முதல்வராக  நீடிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்து விட்ட முதல்வர் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா அறிவித்துள்ளார். காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்குள் இருந்த பூசல்கள் மோதலாக வெடித்து விட்டதால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி இனியும் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது.

எனவே, நமது மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு, குமாரசாமி உடனடியாக முதல்வர்  பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து