ஒரே வாரத்தில் இரண்டு தங்க பதக்கம் வென்ற ஹீமா தாஸ்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      விளையாட்டு
hema das gold 2019 07 08

குட்னோ : 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ். 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றார். இந்நிலையில் குட்னோ தடகள போட்டியில் கலந்து கொண்ட அவர்,  23.97 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.  விகே விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் முகமது அனாஸ் 20 மீட்டரை 21.18 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். எம்.பி. ஜபிர் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து