டி20 உலகக்கோப்பை வரை தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடுவேன்: டு பிளிசிஸ்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      விளையாட்டு
Du Plessis 2019 07 08

மான்செஸ்டர் : 2020 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நீடிக்கலாம் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் விளையாடிய இம்ரான் தாஹிர், டுமினி, கேப்டன் டு பிளிசிஸ் ஆகியோர் இந்தத் தொடருக்குப்பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன்படி டுமினி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது ஓய்வு முடிவை வெளியிட்டு ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், டு பிளிசிஸ் இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா அணி 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் அணியை சீரமைப்பு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுதி வருகின்றனர். இந்நிலையில் இளம் வீரர் ஒருவரை கேப்டனாக உருவாக்கப்பட வேண்டும் என்றால் அவருக்கு அனுபவ மிக்க ஒருவர் தேவை. இதனால் அடுத்த வருடம் நடைபெறும் 2020 டி 20 உலகக்கோப்பை தொடர் வரை விளையாட வாய்ப்புள்ளதாக டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து