முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் 7 பேரின் மனுக்கள் ஏற்பு: 4 மனுக்கள் நிராகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பரிசீலனையில் 7 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது. 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தி.மு.க. சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் சுயேச்சைகள் 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் தலைமை செயலகம் வருகை தந்திருந்தனர். மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதனை அவரது வக்கீல் உறுதிப்படுத்தினார். இதில் வைகோ, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து