கீழக்கரையில் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      ராமநாதபுரம்
rmd chess spotrs

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட அளவிலான 15-வது செஸ் போட்டிகள் நடைபெற்றன.
    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான 15வது செஸ் போட்டி கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் 35 பள்ளிகளில் இருந்து 7, 9, 11, 13 மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட 143 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில்  செஸ் நிர்வாக குழு உறுப்பினர் கே. கார்த்திக் முன்னிலையில் கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் செயலர் எஸ். சுந்தரம் துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் தி. ஜீவா வரவேற்றார். கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் தலைவர் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ. அலாவுதீன் தலைமையில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டி. முனியசங்கர் முன்னிலையில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் முனைவர் எம். உலகராஜ்,  செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் டி. தவசிலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
     முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்  சோமசுந்தரம்  கீழக்கரை தாலுகா அசோசியேசன் துணைத் தலைவர் டாக்டர். எம். ஏச்.செய்யது ராசிக்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் ஐந்து இடம் பெற்றவர்களுக்கு கேடயங்களையும், பதக்கங்களையும்  வழங்கினர். முடிவில், பொருளாளர் சி. குணசேகரன் நன்றி கூறினார். செஸ் முதன்மை ஆர்பிட்டர் ஜி. அதுலன் ஆர்பிட்டர்கள் எம். நித்யா, எஸ். சங்கீதா ஆர். லலிதா ஈஸ்வரி  மற்றும் எஸ்.பிரேமாஆகியோர் போட்டிகளை நடத்தினர். பி.சேகர் ஜெயக்குமார் வி. சதீஷ் குமார் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து