முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை வீழ்த்தியது பிரேசில்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

ரியோடிஜெனீரோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம்  அதிகாலை நடந்தது. இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2 முறை பட்டத்தை வென்றுள்ள பெருவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பிரேசில் அணி 15-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. கேப்ரியல் ஜீசஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் இவெர்டன் சோர்ஸ் கோலாக்கினார். 44-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெரு அணி வீரர் பாலோ குர்ரிரோ கோல் அடித்தார். பெரு அணி கோல் அடித்த அடுத்த நிமிடத்திலேயே பிரேசில் அணி 2-வது கோலை போட்டது. அந்த அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த போட்டி தொடரில் 2 கோல்கள் அடித்த பிரேசில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் 70-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் 2-வது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கண்ணீர் மல்க வெளியேறிய கேப்ரியல் ஜீசஸ் தண்ணீர் பாட்டிலை உதைத்ததுடன், வீடியோ நடுவருக்கு உதவ வைத்து இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரையும் தள்ளி விட்டபடி கோபமாக சென்றார்.

90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்த போட்டி தொடரில் முந்தைய ஆட்டங்களில் கோல் எதுவும் வாங்காத பிரேசில் அணி இறுதிப்போட்டியில் மட்டும் ஒரு கோலை விட்டது. லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அணி கோபா அமெரிக்கா கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் அணி இந்த கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி  2007-ம் ஆண்டில் கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டி தொடரில் சிறந்த வீரராக பிரேசில் அணியின் கேப்டன் டானி ஆல்வ்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேறிய போது கோபமாக தண்ணீர் பாட்டிலை உதைத்த சம்பவத்துக்கு கேப்ரியல் ஜீசஸ் போட்டி முடிந்த பிறகு வருத்தம் தெரிவித்தார். அந்த செயலை நான் தவிர்த்து இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முந்தைய நாளில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை சாய்த்தது. இதில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எரிச்சல் அடைந்த மெஸ்சி பரிசளிப்பு விழாவின் போது தனக்குரிய வெண்கலப் பதக்கத்தை வாங்க செல்ல மறுத்து விட்டார். அத்துடன் அவர் அளித்த பேட்டியில்,

பிரேசில் அணிக்கு கோப்பையை வழங்க தீர்மானிக்கப்பட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் நடுவர்கள், வீடியோ உதவி நடுவர்கள் நியாயமாக எதுவும் செய்யப் போவதில்லை என்று குற்றம்சாட்டினார். பிரேசிலுக்கு ஆதரவாக போட்டி அமைப்பாளர்கள் நடந்து கொள்வதாக மெஸ்சி வெளிப்படையாக பேசிய விஷயம் குறித்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. மெஸ்சி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து