முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இது தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்போது, திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 16- ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மாத பிறப்பையொட்டி, கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் காளாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர், 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து