பா.ஜ.க. அரசு அமைக்க முதல்வர் குமாரசாமி வழி விட வேண்டும் - எடியூரப்பா பேட்டி

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
yeddyurappa 2019 05 27

பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கர்நாடகத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்து விட்டது. அதே வேளையில் பா.ஜ.க.வின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றம் முன்பு நேற்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அக்கட்சியை சேர்ந்த பிற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,

வருகிற 12-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கான உறுப்பினர்கள் அவர்களிடம் இல்லை. இது சட்டவிரோத முறையிலான கூட்டத்தொடராக இருக்கும். இன்னும் காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை. நீங்கள் (கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி) பதவி விலகி பா.ஜ.க. அரசு அமைக்க வழிவிட வேண்டும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து