இந்தியன் ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
Piyush-Goyal 2019 03 04

புது டெல்லி : இந்தியன் ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் நெரிசல் குறைவாக உள்ள பகுதிகளில் தனியார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாகவும், சோதனை முயற்சியாக 2 ரயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரயில்வே துறை தனியார்மயத்தை நோக்கி பயணிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ரயில்வே தனியார்மயம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், இந்தியன் ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்றும், தனியார் மூலம் இயக்கப்படும் பயணிகள் ரயில் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

புதுடெல்லி - லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான துணைக் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து