நமது வீரர்களின் போர்க்குணம் அருமை - உலகக் கோப்பை தோல்வி பற்றி பிரதமர் மோடி கருத்து

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
pm modi 2019 06 30

புது டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. நேற்று நடந்த இந்த ஆட்டத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற இயலாமல் போனது ஏமாற்றமான முடிவு என்றாலும் ஆட்டத்தின் இறுதி வரை நமது வீரர்களின் போர்க்குணம் அருமையாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து