முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ரெயில்கள் மோதல்: 11 பயணிகள் பலி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

லாகூர் : பாகிஸ்தானில் சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது.

இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து