தொடர்ந்து மக்களிடம் தொடர்பில் இருங்கள்: மாஜி பா.ஜ.க. அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      இந்தியா
modi1 2019 05 23

தனது முந்தைய 5 ஆண்டு கால ஆட்சியின் போது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை தொடர்ந்து மக்களுடன் தொடர்ப்பில் இருக்கும்படியும், அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

2014 முதல் 2019 வரை தனது ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு 2 நாட்களுக்கு முன் காலை விருந்தளித்து சந்தித்துள்ளார் பிரதமர் மோடி. அப்போது அவர்களிடம், இப்போது அமைச்சர்களாக இல்லாததால் நீங்கள் விலகி இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அரசுக்கு உதவ வேண்டும். மக்களின் எண்ணங்களை அரசு தெரிந்து கொள்வதற்கும் உதவ வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து, அரசின் செயல்பாடுகள் குறித்து பிரச்சாரம் செய்தும், மக்களின் கருத்துக்களை களத்திற்கே சென்று கண்டறிய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37-க்கும் அதிகமான அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து