உலக பல்கலைக்கழக விளையாட்டு: 100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்த் தங்கம் வென்று சாதனை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      விளையாட்டு
Duttie Chand won gold 2019 07 11

நபோலி : உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் இத்தாலியில் நடந்து வருகிறது.

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் 11.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்ட் 11.33 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை லிசா 11.39 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் ஒடிசாவை சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து