ரூ.634 கோடியில் தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      தமிழகம்
Cm- Assembly 2019 07 12

தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராமப் பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும், யாதும் ஊரே என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிடவும், தொழில் துவங்க முன்வரும் முதலீட்டாளர்களை, வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் காணவும், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும். தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் புதிய அடையாள முத்திரையுடன், நவீன உத்திகளைப் பயன்படுத்தி கூட்டங்கள், கருத்தரங்குகள், இணையவழி பரப்புரை மற்றும் விளம்பரங்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்டு தோறும் 10 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன் அத்தகைய தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வலைதளம் உருவாக்கப்படும்.

தொழில் தோழன் என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சிப்காட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும்.  ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உடனடியாக தொழில் துவங்குவதற்கு ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் - வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டடங்கள், தலா 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பணியாளர்களுக்கு, அவ்விடத்திலேயே குடியிருப்பு வசதியினை ஏற்படுத்த நடப்பாண்டில் சிப்காட் வல்லம் - வடகால் மற்றும் இராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சிப்காட் சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும் வகையில், கருத்தரங்கு கூடங்கள், பயிற்சி மையங்கள் போன்ற வசதிகள் அடங்கிய வணிக வசதிகள் மையம் ஒன்று 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50,000 சதுரடி பரப்பளவில் கட்டப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் தொழில் மயமாக்க ஏதுவாக, குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கும் மேலாக நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில், தொழிற் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களுக்கு, சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கான சலுகைகள் நீட்டித்து வழங்கப்படும்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து