எஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      வர்த்தகம்
SBI 2019 02 19

எஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்.பி.ஐ. வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 கோடி பேர் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. அத்துடன் எஸ்.பி.ஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18 சதவீத மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

மேலும், எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், உடனடி கட்டண சேவை மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து