முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–ஹாலெப்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

விம்பிள்டன்டென்னிஸ்இறுதிப்போட்டியில்செரீனா–ஹாலெப்விம்பிள்டன்டென்னிஸ்இறுதிப்போட்டியில்செரீனா–ஹாலெப்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் செரீனாவும், ஹாலெப்பும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் செரீனாவும், ஹாலெப்பும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஹாலெப் கலக்கல்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன.

ஒரு ஆட்டத்தில் 7–ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–1, 6–3 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஹாலெப் விம்பிள்டனில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.

செரீனா மிரட்டல்

மற்றொரு ஆட்டத்தில் 7 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–2 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) பந்தாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. செரீனாவின் தற்போதைய வயது 37 ஆண்டு 291 நாட்கள். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968–ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் இறுதிசுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சிறப்பை செரீனா பெற்றார்.

நாளை (சனிக்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப்புடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதிலும் செரீனா வெற்றி கண்டால் அதிக கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றியவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார்) சாதனையை சமன் செய்து விடுவார். ஹாலெப்புக்கு எதிராக இதுவரை 10 ஆட்டங்களில் மோதியுள்ள செரீனா அதில் 9–ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெடரரை சந்திக்கும் நடால்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 7–5, 6–2, 6–2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் சாம் குயரியை வெளியேற்றினார்.

நடால், இன்று நடக்கும் அரைஇறுதியில் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)–பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோர் மோத உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து