முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா அமைச்சரவையில் மாற்றம் - பா.ஜ.க.வில் இணைந்த 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பு

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவாவில் காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த 10 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மற்றும் சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் ஆகியோர் நேற்று மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதையடுத்து மந்திரிசபையில் மாற்றம் செய்து, புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் பிரமோத் சாவந்த் முடிவு செய்தார். இதற்கு வசதியாக, ஏற்கனவே மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த கூட்டணி கட்சியினர் 4 பேரை நேற்று நீக்கி முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த மைக்கேல் லோபோ மற்றும் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த பிலிப்பே ரோட்ரிகுவேஸ், ஜெனிபர் மான்செராட்டே, சந்திரகாந்த் கவ்லேகா ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிய மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவி பிராமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து