முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பரில் திட்டமிட்டப்படி முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

கொல்கத்தாவில் நடந்த ராணுவ விழா ஒன்றில் ராணுவ பாதுகாப்பு உற்பத்தி பிரிவு செயலாளர் அஜய்குமார் பேசுகையில்,

பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்னும் 2 மாதத்தில் முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்படும். சட்ட விதிகளின்படி தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து