முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை இன்று 15-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா இன்று 15-ம் தேதி காலை 9.15 மணிக்கு விருதுநகரில் நடைபெற உள்ளது. விருதுநகரில், மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

முன்னதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா (இன்று) 15-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. விருதுநகரில், மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தேச நலனுக்கான காமராஜரின் சுயநலமற்ற தியாக தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்னுடைய முயற்சியினாலும், உழைப்பினாலும் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை அவருடைய பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன். காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்த ஒன்று கூடுவோம் என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு சரத்குமார் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து