முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூர் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் -ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்று விட்டனர். அத்துடன் பா.ஜ.க.வுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபையில் கூட்டணி அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் பா.ஜ.க.வின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு செல்கின்றனர். ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை குலாம்நபி ஆசாத், கமல்நாத் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து