முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு 24 மணிநேர மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு 24 மணிநேரமும் மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோவிலுக்குள் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் மூலவர் எழுந்தருளும் அரிய நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. தற்பொழுது வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் இந்நிகழ்விற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்ய வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் நலனை கருத்திற் கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பல்வேறு பன்முக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை 10 சிறப்பு முகாம்கள், 104 இலவச மருத்துவ உதவி மையம்108 அவசர கால ஊர்திகள் 6, டுவீலர் இருசக்கர அவசரகால ஊர்தி மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலன் கருதி இன்று முதல் 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 108 அவசர கால ஊர்திகள் 4, இருசக்கர அவசரகால ஊர்திகள் பொதுமக்களின் சேவையில் கூடுதலாக ஈடுபடுத்தப்படவுள்ளது. இம்முகாம்கள் பக்தர்கள் செல்லும் வழிகளிலும், திருக்கோயிலைச் சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்ட இம்முகாம்கள், 24 மணி நேரமும் 3 பணிசுழற்சி முறைகளில் 3 மருத்துவர்கள், செவிலியர், மருந்தாளுநர் உட்பட குழுவாக செயல்பட்டு வருகிறது.

இம்முகாம்களில் அனைத்து வகையான அவசர சிகிச்சைகள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காயங்களுக்கு கட்டு கட்டுதல், தையலிடுதல் போன்ற முறைகளையும் சுகாதாரமான முறையில் மேற்கொள்ளப்படும். மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொசு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர குடிநீரில் குளோரின் கிருமிநாசினி கலந்து வினியோகம் செய்வது கண்காணிக்கப்பட்டு, குளோரின் கலந்த குடிநிர் விநியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் இடங்களிலும் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களையும் அன்னதானம் வழங்கும் இடங்களையும் உணவு விடுதிகள் போன்றவற்றிலும் உணவு தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஅத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக பல்வேறு பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக எடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து