முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் தொகுதி, தி.மு.க.வுக்கு வெற்றுக்கோட்டையாக அமையும்: அமைச்சர் ஜெயகுமார் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் தொகுதி தி.மு.க.வுக்கு வெற்றுக்கோட்டையாக தான் அமையும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் உள்ள ஜெயலலிதா மீன்வளத்துறை கல்லூரியில் இளநிலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது, இந்த கலந்தாய்வை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வுக்கு நடிகர் ரஜினிகாந்த் தலைமை தாங்க இருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம். எனக்கு பின்னர் நூறாண்டுகள் கட்சியும், ஆட்சியும் நீடிக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க.வினர் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது. எனவே அதுபோன்ற அவசியமில்லை என்று தெரிவித்தார்.

தபால் துறையில் தமிழில் தேர்வு எழுத அனுமதியில்லை என்பது போன்ற நிலை ஏற்பட்டது குறித்து கேட்டபோது, இப்போது சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளை இந்த கேள்வி சட்டசபையில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி கேள்வி வரும் போது பதில் சொல்வதற்கு தயாராக இருக்கிறோம். நாளை வரை காத்திருங்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்,

வேலூர் தி.மு.க.வுக்கு வெற்றிக்கோட்டையாக அமையும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். வேலூர் தொகுதி தி.மு.க.வுக்கு வெற்றுக்கோட்டை.யாகத் தான் அமையும். ஏனென்றால் கடந்த தேர்தலில் முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே சொல்லப்படாத வாக்குறுதிகளையெல்லாம் ஸ்டாலின் கூறியதையடுத்து பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று விட்டார்கள். அவை நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகள் என்று மக்களும் அதை உணர்ந்து விட்டார்கள். மக்களவை தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு தற்காலிக பின்னடைவுதான். இனிவரும் தேர்தலில் இரட்டை இலைக்குத்தான் வாக்கு என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே வேலூர் பாராளுமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து