முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர பள்ளியில் பேய் பயத்தில் விடுதியை காலி செய்த மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : ஆந்திர நவீன மாடல் பள்ளியில் தங்கியிருந்த மாணவிகள் பேய் பயத்தில் விடுதியை காலி செய்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை செயலாளர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

ஆந்திராவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதியதாக நவீன மாடல் பள்ளிகளை மாநில அரசு தொடங்கி உள்ளது.  இந்த பள்ளியில் சேருபவர்கள் விடுதியில் தங்கி படிக்க வேண்டும். இதற்கான நவீன விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்னூல் மாவட்டத்தில் பெலேகல் என்ற இடத்தில் மாடல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு பிளஸ்-2 வரை (இன்டர்மீடியட்) வகுப்புகள் உள்ளன. மொத்தம் 100 பேர் படித்து வந்தனர். அந்த பள்ளிக்கூடம் அங்குள்ள மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் நள்ளிரவில் எழுந்தார். அப்போது மர்ம பேச்சுக்குரல் கேட்டதாகவும், அச்சுறுத்தும் வகையிலான சத்தங்கள் வந்ததாகவும் அந்த மாணவி கூறினார்.  மேலும் மலைப்பகுதியில் தீப்பிளம்புகள் தென்பட்டதாகவும் தெரிவித்தார். சக மாணவிகளிடம் இந்த வி‌ஷயத்தை கூறினார். இதனால் இரவு முழுவதும் அவர்கள் பயத்திலேயே இருந்தனர். காலையில் எழுந்ததும் அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உடனே அழைத்து செல்லும்படி கூறினார். பெற்றோர் அவரை அழைத்து செல்வதற்காக வந்தனர். இதே போல மற்ற மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் சொன்னார்கள். அவர்களும் வந்து ஒவ்வொரு மாணவியாக அழைத்து சென்றனர். இதனால் விடுதியே சற்று நேரத்தில் காலியானது. இது பற்றி தகவல் அறிந்த பள்ளி முதல்வர் நேரடியாக வந்து பெற்றோர்களை சமரசப்படுத்தினார். ஆனால் யாரும் ஏற்கவில்லை. அனைத்து மாணவிகளும் பெற்றோருடன் சென்று விட் டனர். இது குறித்து கல்வித்துறை செயலாளர் சுரேஷ் கூறும் போது, இதுபோன்ற தவறான வதந்திகளை நம்பக் கூடாது என மாணவிகளுக்கு நாங்கள் விளக்கி சொல்ல இருக்கிறோம். இதற்காக சிறப்பு குழு அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தொடர்ந்து இந்த பள்ளி செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து